search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஆயோக் கூட்டம்"

    நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற கூட்டத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்த எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #NITIAayog #Modi
    புதுடெல்லி:

    மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

    மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


    கடந்த 2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக ஆரோக்கியமான நிலையில் இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் வரும் 2020-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா என்ற இலக்கினை நாம் அடைய வேண்டுமென்றால் சில முக்கியமான நடவடிக்கைகள் மூலம் நமது பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கமாக உயர வேண்டும் என்பது நாம் எதிர்நோக்கியுள்ள சவாலாக உள்ளது என்று கூறினார்.

    ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு கிடைக்கும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நமது நாட்டில் திறமைகளுக்கும், வளங்களுக்கும் எந்த குறையும் இல்லை, கடந்த கால மத்திய அரசு தனது ஆட்சிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் அளித்ததைவிட மாநிலங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். #NITIAayog #Modi #doubledigitsgrowth
    நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியது. #NITIAayog #pmmodi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டது.

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் கடந்த 1-1-2015 அன்று உருவாக்கப்பட்ட புதிய அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜிவ் குமார் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.

    மாநில அரசின் பங்களிப்புடன் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

    இந்நிலையில், இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

    மாலைவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், அனைத்து மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆயுஷ்மன் பாரத், தேசிய சத்துணவு திட்டம், இந்திரதனுஷ், மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, புதிய இந்தியா-2022 போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. #NITIAayog #pmmodi
    டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்படுகிறார். #NITIAayog #EdappadiPalanisamy
    புதுடெல்லி:

    நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

    அதன்படி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. 2 அமர்வுகளாக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும், கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

    எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசும்போது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பார் என்றும், தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

    நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும் எடப்பாடி பழனிசாமி, நாளை இரவே தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார். #NITIAayog #TamilnaduCM #EdappadiPalanisamy
    ×